இந்தியா முழுவதிலும் இருந்து 108 மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பேட்டி:
இஸ்ரோவிற்கு இன்று மிகவும் முக்கியமான நாள்.
யுவிகா திட்டத்தின் மூலம் ஒரு மாநிலத்திற்கு 3 பேர் வீதம், 108 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இரண்டு வார காலம் இஸ்ரோ பயிற்சி அளிக்கிறது. அறிவியல் மற்றும் தொழிநுட்பத்தில் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி.
திறன் உள்ள மற்றும் தேடல் உள்ள மாணவர்களை இந்தியா முழுவதும் தேடி பிடித்து, அவர்களை இஸ்ரோ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மூலை முடுக்குகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.அவர்களிடம் விஞ்ஞானியாக வர வேண்டும் என்கிற உத்வேகம் இருக்கிறது.
வருகிற 22ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-46 , ஆர்.எஸ்.ஆர் 2பி என்கிற செயற்கை கோளை நிலை நிறுத்த போகிறது. சந்திராயன்-2, ஜூலை 9-16 தேதி விண்ணில் செலுத்தப்படும். செப்டம்பர் 6ம் தேதி தரை இறங்கும்.
யாரும் இதுவரை செல்லாத நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபடும்.
புதிய இடமாக இருப்பதால் பல புதிய விபரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
சந்திராயன்-1 நிலவில் நீர் உள்ளது என கூறியது. அது போல இதுவும் பல புதிய தகவல்களை தரும். இவ்வாறு கூறினார்

No comments:
Post a Comment