அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்க 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்: கலெக்டர் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 23, 2019

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்க 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவான்மியூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி வகுப்புக்களுக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 திருவான்மியூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2 ஆண்டு எலக்ட்ரானிக் மெக்கானிக் பிரிவில் 48 இடங்கள் உள்ளது.

அதேப்போல் 2 ஆண்டு எலக்ட்ரீசியன் பிரிவில் 20 இடங்களும், எலக்ட்ரானிக் மெடிக்கல் டெக்னீசியன்-எஸ்சிவிடி பிரிவில் 24 இடங்களும் உள்ளது. ஓராண்டு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டென்ட் பிரிவில் 24 இடங்கள் உள்ளது. மேற்கண்ட 4 படிப்புகளுக்கும் 10ம் வகுப்பு கல்வித்தகுதி ஆகும்.

No comments:

Post a Comment