ஈஃபிள் கோபுரத்துக்கு 130 வயது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 17, 2019

ஈஃபிள் கோபுரத்துக்கு 130 வயது

உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரம் அமைக்கப்பட்டதன் 130-ஆவது ஆண்டு தினம், புதன்கிழமை கொண்டாடப்பட்டது.


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 1889-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கண்காட்சியின் நுழைவு வாயிலாக அமைக்கப்பட்ட ஈஃபிள் கோபுரம், கண்காட்சியின் நிறைவுக்குப் பிறகு இடிக்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த கோபுரத்தின் வடிவமைப்பை பிரான்ஸின் பிரபல கட்டடக் கலை வல்லுநர்கள் விமர்சித்தனர்.


 அந்த கோபுரம் இடிக்கப்பட வேண்டும் என்று பல முறை வலியுறுத்தப்பட்டது.
எனினும், ஈஃபிள் கோபுரம் பலராலும் விரும்பப்பட்டு, பிரான்ஸின் மிகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.


இந்த நிலையில், அந்த கோபுரம் அமைக்கப்பட்டதன் 130-ஆவது ஆண்டு தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது

அந்தக் கொண்டாட்டத்தையொட்டி, ஈஃபிள் கோபுரத்தில் வண்ண மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment