பல்வேறு துறைகளின் கீழ் வழங்கப்படும் எம்ஃபில் மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர ஜூன் 17 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளின் கீழ் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் எம்ஃபில் படிப்புகள், முதுகலை பட்டப் படிப்புகள் மற்றும் முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் ரெகுலர் முறையில் வழங்கப்படுகின்றன.
இப்படிப்புகளில் 2019-2020 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு (www.unom.ac.in) ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாணவ-மாணவியர் ஆன்லைனில் விண்ணப்பித்து அதன்பிறகு பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களுடன் சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த வகையில், எம்ஃபில் மற்றும் முதுகலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூன் 17-ம் தேதிக்குள்ளும், முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 31-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.354-ஐ (விண்ணப்பம் ரூ.300, ஜிஎஸ்டி வரி ரூ.54) ஆன்லைனில் செலுத் திவிடலாம்.
நுழைவுத்தேர்வு மற்றும் குறைந்த பட்ச கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
எம்பிஏ, எம்சிஏ ஆகிய தொழில்படிப்புகளுக்கு டான்செட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் மற்றும் பொது கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
நுழைவுத்தேர்வு ஜூன் 20 முதல் 28 வரை பாடப்பிரிவுகள் வாரியாக வெவ்வேறு நாட்களில் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறி வித்துள்ளது.

No comments:
Post a Comment