விற்பனைக்கு வந்துள்ள 1 டி.பி மெமரி கார்டு..! : விலை எவ்வளவு தெரியுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 18, 2019

விற்பனைக்கு வந்துள்ள 1 டி.பி மெமரி கார்டு..! : விலை எவ்வளவு தெரியுமா?

ஸ்மார்ட் போனின் மெமரி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சாண்டிஸ்க் நிறுவனம் உலகின் முதன்முறையாக 1 டி.பி மைக்ரோ எஸ்.டி கார்டை அறிமுகம் செய்துள்ளது.

இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாட வேலைகள் பெரும்பாலவற்றை செல்போன் செயலிகள் மூலமே முடித்து விடமுடியும்.

செயலிகளால் வேலைகள் எளிதாக முடிந்தாலும், ஸ்மார்ட்போன்களின் வேகத்தைக் குறைப்பதில் அவை முக்கியமான பங்காற்றுகின்றன.


ரேம் மெமரி மட்டுமல்லாது, இன்பில்ட் மெமரியிலும் கணிசமான இடைத்தை செயலிகள் ஆக்கிரமித்துக் கொள்வதுண்டு.


அதனலே பலர் ஸ்மார்ட் போனின் மெமரி அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்

இதற்கு தீர்வு கானும் வகையில் சாண்டிஸ்க் நிறுவனம் 1TB (1 Terabyte=1000 Gigabytes) செயல் திறன் கொண்ட மைக்ரோ எஸ்.டி கார்டை அறிமுகம் செய்துள்ளது.


உலகின் முதன்முறையாக சாண்டிஸ்க் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட 1 டி.பி எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் அதிக தரவுகளை சேமிக்க முடியும்.


 தற்போது சாண்டிஸ்க் 1 டி.பி எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி கார்டு அமேசான் தளத்தில் இந்திய மதிப்பில் 31 ஆயிரத்து 540 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் இந்த மெமரி கார்டு ஸ்பெயின்,‌ பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment