மத்திய அமைச்சரவையில் 2 தமிழர்கள்! அதுவும் திருச்சிகாரர்கள்! யார் தெரியுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

மத்திய அமைச்சரவையில் 2 தமிழர்கள்! அதுவும் திருச்சிகாரர்கள்! யார் தெரியுமா?

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இரண்டு பேருக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டது.

 தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் தேனியில் மட்டுமே வெற்றி பெற்றது.

அந்த வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.


மேலும் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மதிமுகவை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.

 இருந்தாலும் கூட தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் கேபினட் அந்தஸ்துடன் மத்திய அமைச்சர்கள் ஆகியுள்ளனர்

அந்த இருவருமே திருச்சி பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது தான் சிறப்புக்கு உரியது.

அவர்கள் வேறு யாருமல்ல நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கரும் தான்.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஆறாவது நபராக பதவியேற்றவர் நிர்மலா சீதாராமன். இவர் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். படித்தது திருச்சியில் தான். ஆனால் திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் குடிபெயர்ந்து விட்டார்.


இருந்தாலும் திருச்சி பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் பிரதிநிதியாகவே மத்திய அமைச்சரவையில் பார்க்கப்படுவார் என்று நம்பலாம். இதேபோல் மத்திய அமைச்சரவையில் 11 வது நபராக பதவியேற்றவர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவர் வெளியுறவுத்துறையின் செயலாளராகப் பணியாற்றியவர்.


அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதராகவும் ஜெய்சங்கர் பணியாற்றியுள்ளார். மேலும் இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மிக முக்கிய பங்காற்றியவர் ஜெய்சங்கர்.

இவரது குடும்பம் டெல்லியில் செட்டில் ஆகிவிட்டாலும் ஜெய்சங்கரின் தாய் தந்தை திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.


எனவே ஜெய்சங்கரும் கூட மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் பிரதிநிதியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment