சென்னை மாநகராட்சியின் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 14, 2019

சென்னை மாநகராட்சியின் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:

சென்னை மாநகராட்சியின் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 சென்னை மாநகராட்சி சார்பில் ராயப்பேட்டையில் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.


 இங்கு கணினி  இயக்குபவர், பிளம்பர்,  பிட்டர், மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீஷியன்,  எலக்ட்ரானிக் மெக்கானிக்  உள்ளிட்ட பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று  ,இங்கு சேருபவர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது.


இதை தவிர்த்து இலவச சீருடை, இலவச பேருந்து பயண அட்டை, மாதந் தோறும் ₹500 உதவித்தொகை, இலவச மடிக்கணினி உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது.


 அதன்படி 2019ம் கல்வியாண்டிற்கான பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.


 சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், ‘நு’ டிப்போ லாரி நிலையம் ரோடு, முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை என்ற முகவரியில் விண்ணங்களை பெற்று ஜூன் 3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


 இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 6ம் தேதி காலை 10 மணிக்கு கலந்தாய்வு  நடைபெறும்


. அனைத்து அசல் சான்றிதழ்களுடன்  கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு 044 - 28473117 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment