ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துவதில் நடந்த முறைகேடுகளை அடுத்து 300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் என 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு(D.T.Ed) நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கான இந்த படிப்பில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்றால் தான் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற முடியும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18 ஆயிரம் மாணவ மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்கின்ற நிலை உள்ளது.
இதில் சேர்ந்து படிப்பதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் கவுன்சலிங் மூலம் சேர்க்கப்படுகின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டுக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது. இதில் 15 ஆயிரம் பேர் எழுதினர்.
விடைத்தாள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிட தயாராக இருந்த நிலையில், விடைத்தாள் திருத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மேலும், தேர்வு எழுதிய 15 ஆயிரம் பேரில் 2500 பேர் தவிர மற்றவர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் 50 வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது
. அதைத் தொடர்ந்து தேர்வுத்துறையின் சார்பில் வேறு சில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.
அப்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெறும் 7, 8, 10 மதிப்பெண் என பெற்றனர். இதனால் அந்த விடைத்தாள்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டன.
இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணான 50 வழங்கிய ஆசிரியர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறையின் சார்பில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதன்பேரில், ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட 300 ஆசிரியர்கள் பட்டியல் திரட்டப்பட்டது. விடைத்தாள் திருத்திய இடத்தில்தான் முறைகேடு நடந்தது தெரியவந்தது.
அதன்பேரில் 300 ஆசிரியர்களுக்கும் ‘17பி’ நோட்டீசை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பியுள்ளது.
அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை ஏற்கெனவே விளக்கம் கேட்டு பெற்றுவிட்டது.
அதனால் நேரடியாக இந்த ஆசிரியர்களிடம் விசாரணை தொடங்க உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களில் 188 பேர் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் விரிவுரையாளர்களாக இருக்கின்றனர்
112 பேர் தனியார் பள்ளிகளில் பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றுவோரில் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருக்கின்றனர்.
அவர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் ஓய்வு ஊதியம் பெறுவது பாதிக்கப்படும்.
மற்றவர்கள் ஊதிய உயர்வு பெறுவது பாதிக்கப்படும் நிலை ஏற்படும். தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் நிர்வாகங்களே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளன.
அதனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை பறிபோகும். இது போன்ற முறைகேடுகள் பல ஆண்டுகளாக நடந்திருக்கலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment