ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு: அடிப்படை வசதிகளை பராமரிக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு: அடிப்படை வசதிகளை பராமரிக்க உத்தரவு

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில் வகுப்பறைகள், பள்ளி வளாகத்தில் தேவையான பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


 தொடக்க கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படவுள்ளன.


 அதற்கு முன்னதாக பள்ளி வளாகம் துய்மையாகவும், பாதுகாப்பானதாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். வகுப்பறைகள் துய்மையாக இருப்பதுடன், தண்ணீர் வசதியுடன் பயன்படுத்தக் கூடியதாக கழிப்பறைகள் இருக்க வேண்டும்.

அவற்றில் பழுது இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.


தண்ணீர் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். பழுதடைந்த மின்விசிறி, மின்விளக்குகளில் உள்ள பழுது நீக்கப்பட வேண்டும்.


 பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் வரும்போது அன்புடன் வரவேற்று நல்லதொரு கற்றல் சூழலை ஏற்படுத்துவதுடன், பாடப்புத்தகங்கள், சீருடை, நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் அன்றைய
தினமே வழங்க வேண்டும்.


இலவச பேருந்து பயண அட்டை பெற்று தர நடவடிக்கை எடுப்பதுடன், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திறந்தவெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பிகள், மின்கசிவுகள், பழுதடைந்த கட்டடங்கள், புல், புதர்கள், குழிகள் இருந்தால் அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment