ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 31, 2019

ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு

கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.


அவர்களின் ஓய்வு பலன்களுக்காக ரூ.1,600 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில், 2013 நிதி ஆண்டு வரை பணிக்கு சேர்ந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56.


 அந்த வகையில் நேற்று ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். இந்த 5 ஆயிரம் பேரின் ஓய்வு பலன்களுக்காக மாநில அரசுக்கு ரூ.1,600 கோடி செலவு பிடிக்கிறது.


இந்த தகவல்களை மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வினியோகிக்கும் ஆன்-லைன் அமைப்பு ‘ஸ்பார்க்’ தெரிவிக்கிறது.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு பலன்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என மாநில அரசு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


 கேரளாவைப் பொறுத்தமட்டில் 2014 நிதி ஆண்டு முதல் வேலைக்கு சேர்கிற அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 என நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment