இனி கூகுள் சர்ச், மேப்ஸ் மூலமாகவும் உணவு ஆர்டர் செய்யலாம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 24, 2019

இனி கூகுள் சர்ச், மேப்ஸ் மூலமாகவும் உணவு ஆர்டர் செய்யலாம்!

நகரங்களில் உணவை ஸ்மார்ட்ஃபோன் செயலிகள் மற்றும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உணவு ஆர்டர் செய்வதற்காக புதியதாக ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ் அல்லது கூகுள் அசிஸ்டண்ட் மூலமாக நேரடியாக உணவை ஆர்டர் செய்யும் புதிய சேவையை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

அதற்காக கூகுள் நிறுவனம் கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ் போன்ற சேவைகளில் ‘ஆர்டர் ஆன்லைன்’ என்ற புதிய பொத்தான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் உணவை ஆர்டர் செய்ததற்கு ஆன்னலைன் மூலமாகவும், கூகுள் பே செயலி வழியாகவும், ரொக்கப் பணமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக DoorDash, Postmates, Delivery.com, Slice மற்றும் ChowNow நிறுவனங்களின் உணவு டெலிவரி சேவைகள் மட்டும் கிடைக்கும்.

No comments:

Post a Comment