நிலக்கடலையில் இருக்கும் ஸ்பெஷல் இதுதாங்க...!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 27, 2019

நிலக்கடலையில் இருக்கும் ஸ்பெஷல் இதுதாங்க...!!

நிலக்கடலையில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகள் உள்ளன. இது மிகவும் அதிகமான நோய் எதிர்ப்பு சக்திகளை கொண்டுள்ளது. அதைப் பற்றி இங்கு காண்போம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், இதை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாது.

இதை தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும்.

கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும்.

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளதால், மாவுச்சத்துக்கள் மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.

குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும்.

நிலக்கடலை சாப்பிட்டால் உடலின் எடை அதிகரிக்காது. நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாத்து, இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு உகந்தது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது.

இது மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.

உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment