ராணுவத்தில் பல்மருத்துவர் பிரிவில் அதிகாரி வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 27, 2019

ராணுவத்தில் பல்மருத்துவர் பிரிவில் அதிகாரி வேலை

இந்திய ராணுவத்தில் 'ஆர்மி டென்டல் கார்ப்ஸ்' எனும் மருத்துவ பிரிவில் பல் மருத்துவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவு: 'ஆர்மி டென்டல் கார்ப்ஸ்'

காலியிடங்கள்: 65

வயது வரம்பு: 31.12.2019 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பல் மருத்துவத் துறையில் பி.டி.எஸ்., எம்.டி.எஸ். முடித்து பல் மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

பி.டி.எஸ் முடித்தவர்கள் இறுதி ஆண்டில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

 நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

 www.indianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கை வைசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்களை www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2019

No comments:

Post a Comment