நீட் தற்காலிக விடை கையேடு வெளியீடு : கீ சேலஞ்சுக்கு இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

நீட் தற்காலிக விடை கையேடு வெளியீடு : கீ சேலஞ்சுக்கு இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக விடை கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 5ம் தேதி 155 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடந்தது. பானி புயல் காரணமாக ஒடிசாவில் மே 20ம் தேதி இத்தேர்வு நடந்தது. மொத்தம் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.


 இந்தநிலையில், நீட் தற்காலிக விடை கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண், பாஸ்வேர்ட் அளித்து உள்ளீடு செய்ய வேண்டும்.

அதில், ‘‘அப்ளை பார் கீ சேலஞ்’’ என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் நீட் தேர்வில் இடம்பெற்றிருந்த 180 கேள்விகள், அவற்றின் சரியான விடையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆப்சன்கள் இடம்பெற்றிருக்கும்.


 தற்காலிக விடை கையேட்டில் தவறு இருப்பதாக கருதும் மாணவர்கள், அந்த கேள்விகளை தேர்வு செய்து அவற்றுக்கான சரியான விடையாக கருதும் ஆப்சனை தேர்வு பைனல் சப்மிட் என்ற பட்டனை அழுத்த வேண்டும். தவறான விடை இருப்பதாக கருதி மாணவர்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு கேள்விக்கும் தலா ₹1,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

.மாணவர்கள் குறிப்பிட்ட விடை சரியானதாக இருக்கும்பட்சத்தில், மாணவர்கள் செலுத்திய கட்டணம் திரும்ப அளிக்கப்படும். ‘‘அப்ளை பார் கீ சேலஞ்சுக்கு’’ இன்று இரவு 11.50 மணிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment