ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி வேலை: பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 27, 2019

ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி வேலை: பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்தி ராணுவத்தில் 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜன 2020) பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 இதற்கு பிளஸ் டூ முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்கின்றன. இதில் நுழைவுத் திட்டத்தின்படி சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

மொத்த காலியிடங்கள்: 90
பயிற்சி: 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜன 2020)

தகுதி: இயற்பியல், வேதியியல், கணதவியல் பாடங்கள் கொண்ட பிரிவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ (10+2 முறையில் படித்து) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும்.

அதாவது 01.07.2000 மற்றும் 01.7.2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களே.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி நடத்தும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானது முதல் நிலை, இரண்டாம் நிலை என இருநிலைகளில் நடைபெறும்.

 விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2019

No comments:

Post a Comment