உலக கின்னஸ் சாதனை படைப்பதற்காக நகைக்கடை வியாபாரி செய்த அசத்தலான காரியம்.! குவியும் வாழ்த்துக்கள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 16, 2019

உலக கின்னஸ் சாதனை படைப்பதற்காக நகைக்கடை வியாபாரி செய்த அசத்தலான காரியம்.! குவியும் வாழ்த்துக்கள்!

திருவில்லிபுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் உலக கின்னஸ் சாதனை படைப்பதற்காக 12 மில்லி மீட்டர் நீளமுடைய டார்ச் லைட் ஒன்றை 370 மில்லி கிராம் தங்கத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளார.

மேலும் இந்த டார்ச் லைட்டில் பட்டன் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.அதனை அழுத்தினால் லைட் எரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மணிவண்ணன் கூறுகையில், உலக கின்னஸ் சாதனை முயற்சிக்காக தங்கத்திலான டார்ச் லைட்டை உருவாக்கியுள்ளேன்.

மேலும் இதனை இரண்டு நாட்களிலேயே செய்து முடித்துள்ளேன்.


மேலும் இதில் பட்டனை அழுத்தினால் விளக்கு எரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி இதனை போலவே ஏற்கனவே நான் செஸ் போர்டு ஒன்று செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளேன் என மிகவும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்

No comments:

Post a Comment