அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 29, 2019

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

ஜூன் 3-ல் பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் புதிய புத்தகங்கள், இலவச பயண அட்டைகள் வழங்க வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நடந்தன. அதைத் தொடர்ந்து கீழ் வகுப்புகளுக்கும் ஆண்டுத் தேர்வுகள் நடந்தன.

 மக்களவை தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.


 இதையடுத்து ஜூன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ள சில விவரங்கள் பின்வருமாறு :

தமிழ்கத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

ஜூன் 3ம் தேதியன்று அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் கட்டாயம் திறக்கப்பட வேண்டும்.

பள்ளி திறப்பதற்கு முன்தினம் தலைமையாசிரியர்கள் பள்ளி வளாகம், வகுப்பறைகள் தூய்மையாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடைகள்,நோட்டுப் புத்தகங்கள், இலவச பயண அட்டைகள் அனைத்தும் பள்ளி திறக்கும் நாளன்றே வழங்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வசதியான காற்றோட்டமான சூழ்நிலையை உருவாக்கித் தரும் பொருட்டு பழுதடைந்த மின்விசிறிகளை சீரமைக்க வேண்டும்.

பள்ளிகளில் திறந்தவெளிக் கிணறுகள், உயர்மின் அழுத்த மின்கம்பிகள், பழுதடைந்த கட்டிடங்கள் இருந்தால் உடனே சீரமைக்க வேண்டும்.

No comments:

Post a Comment