ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் நுழைவு அட்டை: கலெக்டர் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 20, 2019

ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் நுழைவு அட்டை: கலெக்டர் அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் வீரர், தொழில்நுட்பம், விண்வெளி, ஆயுதப் பொருள் பரிசோதகர், செவிலியர், உதவியாளர்,  எழுத்தர்,பண்டக சாலை காப்பாளர், பொது சேவை மற்றும்  விற்பனையாளர் ஆகியோரை தேர்வு செய்ய கடலூர் மாவட்டம் நெய்வேலி பாரதி ஸ்டேடியத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

 தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு அதாவது கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை. திருவள்ளூர், விழுப்புரம். காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி ( யூனியன் பிரதேசம்) ஆகிய இடங்களில் ராணுவத்திற்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய நெய்வேலி பாரதி மைதானத்தில் சென்னை தலைமையிட ஆள்சேர்ப்பு அலுவலகத்தால் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்கான நுழைவு அட்டை இன்று முதல் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

 ஆள் சேர்ப்பு முகாமுக்கு நுழைவு அட்டை, விண்ணப்பம் மற்றும்  நுழைவு அட்டையில் கூறப்பட்ட ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் கொண்டு வரவேண்டும்.

முகாமிற்கு வரவேண்டிய நாள் மற்றும் காலம் நுழைவு அட்டையில் தெரிவிக்கப்படும்என காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment