அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் பட்டியல் ; உடனே, மூட கல்வித்துறை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 23, 2019

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் பட்டியல் ; உடனே, மூட கல்வித்துறை உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் உரிய அங்கீகாரம் பெறாமல், முறைகேடாக இயங்கிய, 18 பள்ளிகளை மூட நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும், அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இதில், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, அங்கீகார சான்றிதழ் சரிபார்ப்பு, உரிமம் புதுப்பிக்க தவறியவர்கள் என பல்வேறு பிரிவுகளாக கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். இருப்பினும் பல தனியார் பள்ளிகள் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி முறைகேடாக இயங்குவது தொடர்கதையாகி வருகிறது.


கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட மோசமான தீ விபத்திற்கு பிறகு, உரிய அங்கீகாரம் பெறாத பள்ளிகளை களையெடுக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக ஈடுபட்டு வருகிறது.

இதன்கீழ், திருப்பூர் மாவட்டத்தில், 25 பள்ளிகள் கடந்தாண்டு அங்கீகாரமில்லாமல் செயல்பட்ட காரணத்திற்காக மூடப்பட்டன.

இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் 2018 -19 கல்வியாண்டில் அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வந்த, 18 பள்ளிகள் விபரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேற்று அறிவித்தார்.

 இப்பள்ளிகளை இழுத்து மூட உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாகவும், இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் அருகில் உள்ள அரசு அல்லது அங்கீகாரம் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மூடப்படும் தனியார் பள்ளிகள்:

திருப்பூர் தெற்குஏ.கே.எம்., மழலையர் துவக்கப்பள்ளி, ஸ்ரீ அக்ஷயா மழலையர் துவக்கப்பள்ளி, ஜீனியஸ் மழலையர் தொடக்கப்பள்ளி, சாம்யு பிளே மழலையர் தொடக்கப்பள்ளி, லிட்டில் ஏஞ்சல் மழலையர் தொடக்கப்பள்ளிதிருப்பூர் வடக்குஸ்டெல்லா மேரீஸ் மழலையர் தொடக்கப்பள்ளி, செயின்ட் ஜான்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஸ்ரீ சுகி மழலையர் தொடக்கப்பள்ளி, மாருதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிபல்லடம் - காங்கயம்செயின்ட் பால் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, அக்ஷயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, பொங்கலுார் சையதியா ஓரியண்டல் மழலையர் தொடக்கப்பள்ளி,தாராபுரம்பாரதி வித்யாலயா மழலையர் தொடக்கப்பள்ளி, புளூமிங் பட்ஸ் பிளே ஸ்கூல், ஏரோ கிட்ஸ் பிரி ஸ்கூல்உடுமலை - மடத்துக்குளம்ராகவேந்திரா மழலையர் தொடக்கப்பள்ளி, ஜே.எஸ்.ஆர்., மழலையர் தொடக்கப்பள்ளி, ஸ்ரீ குகன் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி.

No comments:

Post a Comment