பள்ளி குழந்தைகளுக்கான ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகம் வற்புறுத்த கூடாது என்று தனியார் பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான தனியார் வித்யாலயா பள்ளி நிர்வாகம், பாட புத்தகங்களுக்கு 5000 ரூபாயும், சீருடைகள், காலணிகள், புத்தக பை, மதிய உணவு எடுத்துச் செல்வதற்கான பைகளுக்கு 5000 ரூபாயும் செலுத்துமாறு மாணவ மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டது.
இதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் ஹேமலதா உள்ளிட்ட இருவர் வழக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல் புருஷோத்தமன் ஆஜராகி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் விலை கொண்ட புத்தகங்களுக்கு பதிலாக, 5,000 ரூபாய் விலையுடைய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களை பள்ளி நிர்வாகங்கள் வழங்குகின்றன. இதனால், நடுத்தர பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் தவிர மற்ற பொருட்களை பள்ளி சார்பில் தரக்கூடாது என்ற நடைமுறை விதிகள் உள்ளன.
ஆனால், இந்த பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் ஆகியவற்றுக்கும் பணம் வசூலிக்கிறார்கள் என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை பள்ளி நிர்வாகம் விற்பனை செய்யலாம்
ஆனால், இவை தவிர்த்து பிற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என்று உத்தரவிட்டதுடன், இந்த வழக்கின் விரிவான விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:
Post a Comment