அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 31, 2019

அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வரும் 7ம் தேதி மாநில அளவில் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

.இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் அறிக்கை:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இதற்காக போராட்டங்கள் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்.திடீர் இடமாறுதல்களை ரத்து செய்து ஆசிரியர்களுடன் சுமூக உறவை அரசு ஏற்படுத்த வேண்டும்.

 அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்களை பணிநிரவல் முறையில் மாற்றுவதை ரத்து செய்து, 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை ஏற்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அரசு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டும். அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். 2011 நவ. 15க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment