மாநில அளவிலான மல்யுத்தத்தில் அசத்திய மாணவர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 16, 2019

மாநில அளவிலான மல்யுத்தத்தில் அசத்திய மாணவர்கள்

தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அண்மையில் நடைபெற்றது. குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டி, மினி ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என 4 பிரிவுகளாக நடைபெற்றது. மேலும், வயதைப் பொறுத்துபல்வேறு எடைப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.


 விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் கலந்துகொண்டு, மல்யுத்தம் செய்தனர்.

இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஈரோடு மாவட்ட அணி கைப்பற்றியது. இரண்டாமிடத்தை நாமக்கல் மாவட்ட அணியும், மூன்றாமிடத்தை கோவை மாவட்ட அணியும் கைப்பற்றின.

கோவை அணியில் கோவை ஸ்ரீநேரு வித்யாலயாமாணவ, மாணவிகள் பல்வேறு வெற்றிகளைக் குவித்து சாதனை புரிந்தனர்.


 மாணவிகள் சங்கவிகா (66 கிலோ எடைப் பிரிவு), பிரியங்கா (73 கிலோ), சுபஸ்ரீ(69 கிலோ), மாணவர் பிரதிக் (92 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.


இதேபோல, மாணவிகள் திவ்யா (33 கிலோ), லோலா (56 கிலோ), மாணவர் கௌஷிக் (59 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், மாணவிகள் மிருதுளா (36 கிலோ), ப்ரதிக்சா (54 கிலோ), தனு (54 கிலோ), மாணவர்கள் பிரணவ் (52), அர்மாஷ் அஹ்மத் (72 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.


 மாணவி சங்கவிகா 15 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, ராஜஸ்தானில் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித்தலைவரும், கோவை நலச் சங்கத் தலைவருமான ரமேஷ் சி.பாஃப்னா, செயலர் அசோக் குன்டேசா, பள்ளி முதல்வர் செண்பகா ரமேஷ், உடற்கல்வி இயக்குநர் ஜி.கிருஷ்ணகுமார் மற்றும் கோவை நலச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment