பொது அறிவை வளர்க்கும் அரசு பஸ் கண்டக்டர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 18, 2019

பொது அறிவை வளர்க்கும் அரசு பஸ் கண்டக்டர்

தஞ்சையில் அரசு பஸ் கண்டக்டர், பொது அறிவு சார்ந்த கேள்வி - பதிலை, தினமும் பஸ்சில் ஒட்டி வருகிறார்.

திருவாரூர், மன்னார்குடி அடுத்த அசேஷம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த், 45; அரசு பஸ் கண்டக்டர்.

மன்னார்குடி டிப்போவில் பணியாற்றி வருகிறார்.மன்னார்குடியில் இருந்து தஞ்சை வழியாக திருச்சி செல்லும் அரசு பஸ்சில், 2010ம் பணியில் சேர்ந்தார்.இந்நிலையில், 2012ம் ஆண்டு முதல், தாய்மை, நட்பு என பல்வேறுதலைப்புகளில் உள்ள கவிதைகளை, இவர் வேலைக்கு வரும் நாளில், பஸ்சின் உள்ளே சிறிய பேப்பரில் எழுதி ஒட்டி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்

கடந்த ஒரு ஆண்டாக, பொது அறிவு சார்ந்த கேள்வி பதில்களை, 'பிரின்ட் அவுட்' எடுத்து, பஸ்சில் ஒட்டி வருகிறார்.

 இது பயணியர், மாணவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், அவருக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.


கண்டக்டர் ஆனந்த் கூறியதாவது:என் அம்மா மறைவுக்குப் பின், அவர் மீதுள்ள பாசத்தால், முதலில் தாய்மை குறித்த கவிதைகள், வாசகங்களை எழுதி ஒட்டி வந்தேன்.

அதன் பிறகு செய்தித்தாள், மொபைல் போனில் வரும் கவிதைகள், வாசகங்களை ஒட்டி வந்தேன்.தற்போது, என் மனைவி ஆசிரியையாக உள்ளதால், அவரின் உதவியுடன், பொது அறிவு சார்ந்த கேள்வி - பதில் ஒன்றை தினமும் ஒட்டி வருகிறேன்.


இது, அரசு வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.இன்னும் அதிகமான பொது அறிவு கேள்வி - பதில்களை ஒட்ட திட்டமிட்டு உள்ளேன்.

 அத்துடன் பஸ்சை மிகவும் சுத்தமாக வைத்திருப்பதாலும், என்னையும், டிரைவர் அசோக்குமாரையும் பயணியர் வெகுவாக பாராட்டி செல்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment