தாமிரபரணிக்கு நாம் தந்த பரிசு': நெல்லை மாணவர் உருவாக்கிய ஆவணப் படம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 23, 2019

தாமிரபரணிக்கு நாம் தந்த பரிசு': நெல்லை மாணவர் உருவாக்கிய ஆவணப் படம்

தாமிரபரணிக்கு நாம் தந்த பரிசு'என்ற தலைப்பில் புதிய ஆவணப்படத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர் கா.அபிஷ் விக்னேஷ் உருவாக்கியிருக்கிறார்.

தாமிரபரணி தனது பாதையில்கடக்கும் பெரிய நகரம் திருநெல்வேலி. இங்கு கருப்பந்துறை முதல் வெள்ளக்கோயில் வரை 27 இடங்களில் ஆற்றில் சாக்கடை கலப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆற்றங்கரையானது திறந்தவெளி கழிப்பிடமாக உள்ளது.

மக்களுக்கு நோய் தொற்றுதிருநெல்வேலி சந்திப்பில் உள்ள அனைத்து கடைகள், தங்கும்விடுதிகளின் கழிவுகள் சிந்துபூந்துறையில் ஆற்றுக்குள் விடப்படுகின்றன.

 திருநெல்வேலியில் மட்டும் 1 நிமிடத்துக்கு 11 லட்சம் லிட்டர் கழிவு நீர் தாமிரபரணியில் கலப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சாக்கடை கலந்ததண்ணீரில் குளிப்பதால் நோய் தொற்றுக்கு ஆளாவதாக மக்கள்தெரிவிக்கின்றனர். இந்த அம்சங்களை உள்ளடக்கி 18 நிமிடங்களுக்கு இந்த ஆவணப்படம் நம்கண்முன்னே விரிகிறது.

 திருநெல்வேலியில் உள்ள பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய்கள் கழிவுநீர் கால்வாய்களாக மாறியதை உணர்த்தும் காட்சிகள் பார்ப்போரை பதறவைக்கின்றன.

தாமிரபரணியில் கழிவுகள் கலப்பது குறித்து எழுத்தாளர் நாறும்பூ நாதன், கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும்தங்கள் கவலையை இப்படத்தில் பதிவிட்டுள்ளனர்.

 குளத்தூர் ஜமீன்தார் ஆட்சி காலத்தில் திருநெல்வேலியில் உள்ள கால்வாய்களில் படகுகளில் காவலர்கள் ரோந்து வருவார்களாம். மக்கள் குடிக்கும் நீரில் மாசு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு என்ற வரலாற்று தகவலும் இப்படத்தில் சொல்லப்படுகிறது.

 செய்துங்கநல்லூர் பகுதியில் வீடுகளில் உறிஞ்சு கிணறுகள் அமைத்து கழிவு நீரை அதில்விடும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதை தீர்வாக முன்வைத்து ஆவணப்படம் நிறைவடைகிறது.

அரசுக்கு கோரிக்கைஇதுதொடர்பாக அபிஷ் விக்னேஷ் கூறும்போது, "ஆற்றில்கழிவுகள் கலப்பதை தடுப்பதுதொடர்பாக மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்றநோக்கத்தில் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளேன். ஏற்கெனவே 'வற்றவிடலாமா ஜீவநதியை' என்ற ஆவணப்படத்தை உருவாக்கியிருந்தேன்.

 தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தடுக்க அரசு திட்டமிட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆவணப்படத்தில் வைத்துள்ளேன்" என்றார் அவர்

No comments:

Post a Comment