பச்சை நீல நிறத்தில் தரை இறங்கிய விண்கல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 22, 2019

பச்சை நீல நிறத்தில் தரை இறங்கிய விண்கல்

ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாண பகுதியில் உள்ள ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில், ஏரிகள் ஒன்று மிகுந்த சத்தத்துடன் மற்றும் வெளிச்சத்துடன் தரை இறங்கியுள்ள சம்பவம் அங்குள்ள காவல்துறையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்பொழுது இந்த சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

ஏரிகள் தரை இறங்கியதாக புகார்
என்.டி. காவல்துறை டியூட்டி கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஓ 'பிரையன் என்பவருக்கு நள்ளிரவில் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் குடியிருப்பு பகுதியிலிருந்து போன் கால் வந்துள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்கள் ஏரிகள் தரை இறங்கியதாக அவரிடம் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் வைத்திருந்த சிசிடிவி கேமராவை பார்வையிட்டபொழுது, பச்சை கலந்த நீல நிறத்தில் வானிலிருந்து மிகுந்த சத்தத்துடன் அதிக பிரகாசத்துடன் விண்கல் தரை இறங்கியது பதிவாகி இருந்தது.

இந்த விண்கல் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் குடியிருப்பு பகுதியிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் தரை இறங்கி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக எந்த இடத்தில் இந்த விண்கல் தரை இறங்கியுள்ளது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்பொழுது இந்த ஆதாரம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதேபோன்று கடந்த ஏப்ரல் மாதத்திலும் பச்சை நீல நிறத்தில் விண்கல் ஒரு விண்கல் புளோரிடா நகர்ப்பகுதியில் தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.


அந்த விண்கல் தரை இறங்கிய ஆதாரம் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

No comments:

Post a Comment