ஜூன் மாதம் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிறது தெரியுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 31, 2019

ஜூன் மாதம் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிறது தெரியுமா?

இந்த ஜூன் மாதம் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிறது என்பதை பற்றியும், அவற்றின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களையும் இங்கு காணலாம்.

Samsung Galaxy M40:

 சாம்சங் எம் சீரிஸ் வரிசையில் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் தான் சாம்ங் கேலக்ஸி எம்40. வரும் 14ம் தேதி இந்தியாவில் இது அறிமுகமாகிறது. இதன் விலை 20 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.

Asus Zenfone 6:

ஒன்பிளஸ் 7க்குப் போட்டியாக இருக்கும் வகையில், அசுஸ் நிறுவனம் சென்போன் 6 ஸ்மார்ட்போனை ஜூன் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே இது ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமே கேமரா தான். செல்பிக்கு என்று தனி கேமரா கிடையாது. பின்புறத்தில் இருக்கும் கேமரா தான், அப்படியே மேல்நோக்கி திரும்பி செல்பி கேமராவாக செயல்படும். விலை குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Realme X:

கடந்த வாரம் சீனாவில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது.இது ரெட்மி கே 20 (அதாவது போகோ எப் 2) ஸ்மார்ட்போனுக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டிலும் ஒரே விதமான ஸ்நாப்டிராகன் 730 பிராசசர் இருக்கும் என்றும், இதன் விலை 17 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என்றும் இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

Redmi 7A:

ரெட்மியின் மற்றொரு பேசிக் மாடல் ஸ்மார்ட்போனும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவின் ஸ்மார்ட்போன் என்று இது அழைக்கப்படுகிறது. அடிப்படை சிறப்பம்சங்கள் ரேம், மெமரி இதில் உள்ளது. அதற்கு ஏற்றவாறு விலையும் 5 ஆயிரத்துக்குள்ளாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Xiaomi Poco F2:


சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, கே 20 மற்றும் கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. நேற்று முன்தினம் 28ம் தேதி பெய்ஜிங்கில் இது அறிமுகமான நிலையில், இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகமாகிறது. ஆனால், அதே பெயரில் இல்லாமல் போகோ எப்2, எப்2 ப்ரோ என்ற பெயரில் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்ககப்படுகிறது. கே 20 வேரியண்ட் 20 ஆயிரம் ரூபாயிலும், கே 20 ப்ரோ வேரியண்ட் 25 ஆயிரம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


honor 20:

ஜூன் 11ம் தேதி ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பாரீஸ் நகரில் ஹானர் 20 அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அதில் எந்த வேரியண்ட் அறிமுகமாகும் என்று உறுதிபடுத்தப்படவில்லை.

No comments:

Post a Comment