குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் : புகார் பெட்டி வசதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் : புகார் பெட்டி வசதி

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க மின்னணு புகார் பெட்டி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்துள்ளார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை போன்றே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும், உறவினர்கள் மூலமே குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க மின்னணு புகார் பெட்டி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 www.ncpcr.gov.in என்ற வலைதளம் மூலம் புகாரை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment