12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 4, 2019

12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடப் புத்தகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நடிகர் திலகம் சிவாஜி உடனான தனது அனுபவத்தை, "சிதம்பர நினைவுகள்" என்ற பெயரில், மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, புத்தகமாக எழுதியிருந்தார். அதில், சிவாஜியை நேரில் சந்தித்த தனது அனுபவங்களைப் பட்டியலிட்டிருந்தார்.

இந்த பகுதிகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தமிழ் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமின்றி, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ, "சிவாஜி தன்னை போல் நடிக்க முடியும், ஆனால், தம்மால் சிவாஜியை போல் நடிக்க முடியாது" என தெரிவித்திருந்த கருத்தும் இடம்பெற்றுள்ளது.

இன்றளவும், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம்பெற்றிருக்கும், நடிகர் சிவாஜி கணேசனின் கட்டப்பொம்மன் திரைப்பட வசனங்கள் உள்ளிட்டவையும், அவர் பெற்ற விருதுகள் குறித்தும், 12ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது

No comments:

Post a Comment