மகனுடன் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

மகனுடன் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண்

திரிபுரா மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தாயும் மகனும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுரா மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தலாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாமளி தேவி சக்மா. இவரது மகன் குணமோய் சக்மா.

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தாயும் மகனும் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதில் படிப்பை பாதியில் நிறுத்திய ஷியாமளி தேவி, இப்போது தன் மகனுடன் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வயதானாலும் விடா முயற்சியுடன் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தாய்க்கு, கிழக்கு திரிபுரா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரேபதி பாராட்டு தெரிவித்துள்ளார். இது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment