மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கு கூடுதலாக 191 இடங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 23, 2019

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கு கூடுதலாக 191 இடங்கள்

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில், எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கையில் 100 கூடுதல் இடங்களுடன், சிறப்பு பட்ட மேற்படிப்புகளில் 21 இடங்களுக்கும், பட்ட மேற்படிப்புகளில் 70 இடங்களுக்கும் இந்தாண்டே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


 மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கைக்கு இதுவரை 150 இடங்கள் மட்டுமே இருந்தன. தற்போது, கூடுதலாக 100 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.


 மேலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் உயர் பட்ட மேற்படிப்புகளுக்கு 21 இடங்களுக்கும், டிப்ளமோ கோர்சாக இருந்து, டிகிரி கோர்சாக தரம் உயர்த்தப்பட்ட, பட்டமேற்படிப்புகளுக்கு 70 இடங்களுக்கும் இந்தாண்டே மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது

இதனையடுத்து, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் 250 இடங்களுக்கும், சிறப்பு பட்டமேற்படிப்புகளுக்கு 21 இடங்களுக்கும், தரம் உயர்த்தப்பட்ட பட்டமேற்படிப்புகளுக்கு 70 இடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சிறப்பு பட்ட மேற்படிப்புகள்: குடல் மற்றும் இரைப்பை துறைக்கு, மருத்துவம் (டிஎம்) 2 இடங்கள், அறுவை சிகிச்சை (எம்சிஹெச்) 3 இடங்கள், சிறுநீரக துறைக்கு மருத்துவம் (டிஎம்) 2 இடங்கள், அறுவை சிகிச்சை (எம்சிஹெச்) 4 இடங்கள், புற்றுநோய் துறைக்கு மருத்துவம் (டிஎம்) 2 இடங்கள், அறுவை சிகிச்சை (எம்சிஹெச்) 4 இடங்கள், ரத்தநாள அறுவை சிகிச்சைக்கு (எம்சிஹெச்) 2 இடங்கள், சுரப்பியல் துறையில் மருத்துவம் (டிஎம்) 2 இடங்கள் என மொத்தம் 21 இடங்கள்.


 பட்ட மேற்படிப்புகள்: (மருத்துவ பிரிவு) மயக்கவியல் 13 இடங்கள், குழந்தைகள் நலம் 11 இடங்கள், மனநலம் 2 இடங்கள், தோல் மற்றும் பால்வினை நோய் ஒரு இடம், நுண்கதிரியல் துறை 9 இடங்கள், (அறுவை சிகிச்சை பிரிவு) மகப்பேறு துறை 16 இடங்கள், காது மூக்கு தொண்டை பிரிவு 5 இடங்கள், கண் பிரிவு 12 மற்றும் எலும்பு முறிவு பிரிவில் ஒரு இடம்.

No comments:

Post a Comment