நோட்ஸ்' விலை 20 சதவீதம் உயர்வு: பெற்றோர், மாணவர் அதிர்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 15, 2019

நோட்ஸ்' விலை 20 சதவீதம் உயர்வு: பெற்றோர், மாணவர் அதிர்ச்சி

பள்ளி பாட, 'நோட்ஸ்' புத்தகங்களின் விலை, 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, பெற்றோர், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், பள்ளிகள், 3ம் தேதி திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில், மாணவ - மாணவியருக்கு, நோட்ஸ் புத்தகம் தவிர்த்து, மற்றவை, அரசு சார்பில் வினியோகிக்கப்படுகிறது.இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், பாடங்களுக்கான, நோட்ஸ் புத்தகத்தை, கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர்


.'கோனார், சுறா, சூரியா, கங்கா, தேன்தமிழ், மாஸ்டர், டால்பின்' உள்பட, 25 நிறுவனங்கள் சார்பில், மூன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனைத்து பாடங்களுக்கும், தற்போது நோட்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இந்த நோட்ஸ் புத்தகங்கள், கடந்த கல்வியாண்டில், 120 - 290 ரூபாய்க்கு விற்கப்பட்டன.


நடப்பு கல்வியாண்டில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, புதிய பாடத் திட்டம் போன்றவற்றால், 20 சதவீதம் வரை, தயாரிப்பு நிறுவனங்கள், நோட்ஸ் புத்தகத்தின் விலையை உயர்த்தியுள்ளன. தற்போது, 145 - 350 ரூபாய் விற்கப்படுகின்றன

இதனால், பெற்றோர், மாணவ - மாணவியர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.வியாபாரிகள் கூறுகையில், 'எட்டு மற்றும் பிளஸ் 2 வகுப்பு நோட்ஸ்களுக்கு மட்டும் தட்டுப்பாடு உள்ளது. விலை உயர்த்தப்பட்டாலும், விற்பனை களைகட்டுகிறது' என்றனர்.

No comments:

Post a Comment