வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்க அனுமதிக்கும் உத்தரவு : இந்த கடைகளுக்கு பொருந்தாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்க அனுமதிக்கும் உத்தரவு : இந்த கடைகளுக்கு பொருந்தாது

தமிழகத்தில் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.


 இதனால் எல்லா கடைகளும் இரவு நேரங்களிலும் திறந்திருக்கும் என்று மக்கள் நம்பினர். ஆனால் எல்லா கடைகளையும் திறந்து வைக்க முடியாது என்று அதற்கான சட்டத்தில் உள்ள பிரிவு, மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலாளர்கள் நலனுக்காக பல நிபந்தனைகளை விதித்து இந்த அனுமதியை தமிழக அரசு அளித்திருந்தாலும், சிறிய கடைகளுக்கு இந்த அனுமதி உத்தரவு பொருந்துமா? என்றால், அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இரவு 11 மணிக்குள்...

ஏனென்றால், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ன் படி, இந்த அனுமதியைப் பெறும் கடைகள் அல்லது நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு, தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பாணையின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சாலை ஓரங்களில் காணப்படும் சிறிய கடைகளான டீ கடைகள், பெட்டிக் கடைகள், ஜெராக்ஸ் கடைகள், நடைபாதை உணவகங்கள், பழக்கடைகள், காய்கறிக் கடைகள், பலசரக்குக் கடைகள், சிறிய உணவகங்கள் போன்றவற்றை 24 மணி நேரமும் நடத்த முடியாது. போலீஸ் சட்டத்தின்படி இதுபோன்ற கடைகளை இரவு 11 மணிக்குள் மூடியாக வேண்டும்.

தொழிலாளிக்கு வருமானம்

ஒரு ஷிப்ட்-க்கு (8 மணிநேரம்) 4 ஊழியர்கள் வீதம் நியமித்து, 3 ஷிப்டுகள் (24 மணிநேரம்) நடத்தப்படும் டீ கடைகள், சிறிய உணவகங்களால் சாதாரண தொழிலாளிகளுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.


ஆனால் அதுபோன்ற டீ கடைகள், சிறிய உணவகங்களெல்லாம், ரெயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள், பெரிய ஆஸ்பத்திரிகள் போன்ற மக்கள் நடமாட்டம் 24 மணி நேரமும் இருக்கும் இடங்களில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment