கண்மாய் தூர்வார உண்டியல் பணத்தைக் கொடுத்த 2 வயது சிறுமி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

கண்மாய் தூர்வார உண்டியல் பணத்தைக் கொடுத்த 2 வயது சிறுமி

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே உள்ளது புதுக்குளம் கண்மாய். இதைத் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அப்பணியைத் தொடங்கிவைத்தார். மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் சமூக அமைப்புகள் சில இணைந்து இந்தத் தூர்வாரும் பணியைச் செய்துவருகின்றனர். இந்த நிலையில், தூர்வாரும் பணிக்காக தனது சேமிப்பிலிருந்து பணத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார் தேனியைச் சேர்ந்த 2 வயது சிறுமி.
தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் - பிரேமா தம்பதி. இவர்களின் 2 வயது மகள் ஸ்ரீகபி. தன் தந்தை மற்றும் தாயிடம் இருந்து தினமும் நாணயங்கள் வாங்கி உண்டியலில் போட்டு சேர்த்துவைத்துள்ளார். இப்படிச் சேர்த்த பணம் மொத்தம் 1,300 ரூபாய். இப்பணத்தை புதுக்குளம் கண்மாய் தூர்வாரும் பணிக்காக கொடுத்து உதவியுள்ளார். அதை தேனி நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சற்குரு பெற்றுக்கொண்டார். சற்குரு கூறும்போது, ``தினமும் அவரின் பெற்றோரிடமிருந்து காசு வாங்கி சிறுகச்சிறுக சேர்த்துவைத்திருக்கிறார். தன் தந்தையின் உதவியுடன் அதை கண்மாய் தூர்வார கொடுத்து உதவியுள்ளது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி மட்டுமல்லாமல், முன்னுதாரணமாகவும் ஆகிவிட்டார்.

இதுபோல பலரும் தன்னால் ஆன உதவிகளைச் செய்தால் தேனி மாவட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து வளமாக வாழலாம்" என்கிறார். வரும் நாள்களில் கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெறும் எனவும் அதைத் தொடர்ந்து கண்மாய் தூர்வாரும் பணி நடைபெறும் எனவும் கலெக்டர் தெரிவித்தார். இப்பணிக்காக பணிக்காக 2 வயது ஸ்ரீ கபி உதவியிருப்பது தேனி வட்டாரத்தில் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பலரும் பாராட்டிவருகிறார்கள்.

No comments:

Post a Comment