2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 26, 2019

2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது

உத்தரகண்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யும் மசோதா மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் பஞ்சாயத்து ராஜ் (திருத்த) மசோதா, மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.


அந்த மசோதாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது எனவும், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மசோதா மீதான விவாதம் மாநில சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரத்தில், குறிப்பிட்ட நபர்களிடமிருந்து மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் லஞ்சம் பெற்றதாகக் கூறி, பேரவையில் விவாதம் நடைபெற விடாமல், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், சட்டப்பேரவையில் மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


மசோதாவின்படி, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஆண்கள் ஆகியோர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றிருக்க வேண்டும்.


 அதே வேளையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்கள், குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றிருந்தால் போதுமானது.
உத்தரகண்டில் இந்தாண்டு இறுதியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது

No comments:

Post a Comment