3 ஆண்டு கொள்கை திட்டத்தை இரண்டே ஆண்டில் செயல்படுத்தி உள்ளோம்:அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 1, 2019

3 ஆண்டு கொள்கை திட்டத்தை இரண்டே ஆண்டில் செயல்படுத்தி உள்ளோம்:அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் அண்ணா, புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வகுத்த கொள்கைப்படி தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கை நீடிக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:-

தமிழகத்தில் இரு மொழி கொள்கை இருந்து வருகிறது. அண்ணா, புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வகுத்த கொள்கைப்படி தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அந்த கொள்கையே தொடரும்.

நாளை மறுநாள் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்.

கல்வித்துறையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம். புதிய கல்வி ஆண்டில் 8 வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

2-ம் வகுப்பு, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 3 ஆண்டு கொள்கை திட்டத்தை இரண்டே ஆண்டில் செயல்படுத்தி உள்ளோம்

மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் அடங்கிய புத்தகங்களை நாளை மறுநாள் (3-ந்தேதி) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment