ரயில்வே பணிகளில் சேர இளம்பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தொழில்நுட்ப பிரிவு சார்ந்த பணிகளில் சேர தமிழகத்தில் இருந்து மட்டும் இந்த முறை 39 ஆயிரத்து 139 பேர் ரயில்வேயை நாடியுள்ளனர்.
ரயில்வேயில் தொழில்நுட்ப பிரிவில் அசிஸ்டென்ட் லோகோ பைலட், டெக்னீஷியன் உள்ளிட்ட பிரிவுகளில் ஆட்களை தேர்வு செய்ய ஆன்லைன் தேர்வு அண்மையில் நடைபெற்றது. வழக்கமாக ஆண்கள் அதிகம் தேர்வு செய்யகின்ற பணிகளில் தற்போது பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
லோகோ பைலட் மற்றும் டெக்னீஷியன் பிரிவுகளில் விண்ணப்பித்தவர்கள் பெண்கள் மொத்தம் 4.75 லட்சம் ஆகும். இவர்களில் தமிழகத்தில் இருந்து 39 ஆயிரத்து 139 பெண்கள் போட்டியில் உள்ளனர்
அசிஸ்டென்ட் லோகோ பைலட், பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 64 ஆயிரத்து 371 காலியிடங்கள் உள்ளன.
வழக்கமாக ஆண்கள் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி பணிபுரிந்து வந்த இந்த பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மொத்தம் 27 ஆயிரத்து 795 லோகோ பைலட்டுகள், 36 ஆயிரத்து 576 டெக்னீஷியன்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
. 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்றவர்கள் அதனுடன் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
ரயிலில் ஓட்டுநர் பணி என்பது அதன் பணி நேரத்தினை கருத்தில் கொண்டு மிகவும் சிரமம் வாய்ந்ததாக கருதப்படுவது உண்டு.
பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்போது ரயிலில் ஓட்டுநராக பணிபுரிகின்றவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் ரயில்வே பணிகளில் பெருமளவு பெண்கள் சேர வாய்ப்பு இருப்பதாகவும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment