நிறைவு பெற்றது சிறப்புப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு: பொதுப் பிரிவினருக்கு ஜூலை 3-இல் தொடக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

நிறைவு பெற்றது சிறப்புப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு: பொதுப் பிரிவினருக்கு ஜூலை 3-இல் தொடக்கம்

சிறப்புப் பிரிவினருக்கான பொறியியல் நேரடி சேர்க்கை வியாழக்கிழமையுடன் நிறைவுபெற்ற நிலையில், கடைசி நாளில் விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் 330 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.


சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. நேரடி கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. இவர்களுக்கு 6,915 இடங்கள் ஒதுக்கப்பட்டன.


 ஆனால், அழைக்கப்பட்ட 143 பேரில், 101 மாணவர்கள் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்தனர். இதனால், 6,814 இடங்கள் சேர்க்கையின்றி காலியாகின.
இரண்டாம் நாளில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான சேர்க்கை நடைபெற்றது.இதில் பங்கேற்க 956 பேர் அழைக்கப்பட்ட நிலையில் 499 பேர் மட்டுமே பங்கேற்றனர்.


இவர்களில் 121 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.
மூன்றாம் நாளான வியாழக்கிழமை விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றது.


 500 இடங்களுக்கு 1,658 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 330 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். இதனால்,170 இடங்கள் சேர்க்கையின்றி காலியாகின.

இதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை ஆன்லைன் முறையில் ஜூலை 3 -ஆம் தேதி தொடங்கிறது.

No comments:

Post a Comment