வேலூர் நூலகத்தில் நாளை மறுநாள் தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 13, 2019

வேலூர் நூலகத்தில் நாளை மறுநாள் தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் தொடங்குகிறது.


 தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு, கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகியவற்றில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.


 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக ஜூலை 14ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நடக்க உள்ளது.


 இதையொட்டி வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு துறை சார்ந்த பேராசிரியர்கள் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை மறுதினம் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.


எனவே போட்டித்தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நூலக அலுவலர்கள் தெரிவித்தனர்.

17 பேருக்கு அரசு வேலை


வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயின்றவர்களில் 17 பேர் சப்-கலெக்டர், வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத்துறை, ஆய்வக உதவியாளர், விஏஓ உள்ளிட்ட அரசு பணிகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment