ஏர்டெலின் வேற லெவல் புதிய ப்ரீபெய்ட் சலுகை: 6GB டேட்டா!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 9, 2019

ஏர்டெலின் வேற லெவல் புதிய ப்ரீபெய்ட் சலுகை: 6GB டேட்டா!!

ஜியோவின் புதிய வரவால் ஏர்டெல் ரூ.597 -க்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 180 நாட்கள் வேலிடிட்டியில் 3G/4G அலைவரிசையில் 6GB டேட்டா!!

தொலை தொடர்பு துறையில் போட்டிகள் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக ப்ரீபெய்ட் மொபைல் இணைப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கிறது.


தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் டெலிகாம் நிறுவனங்கள் தினத்தோறும் புதிய சலுகைகளை போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள ஜியோ-வை மிஞ்சும் அளவுக்கு புதிய சலுகைகளை வாரி இறைத்து வருகிறது.

தற்போது, ஏர்டெல் ரூ.597 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெலின் ரூ.597 ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரம்:-

168 நாட்கள் வேலிடிட்டியில் 6GB டேடாவுடன் ரூ.597 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல்.


 ஏர்டெல் நிறுவனமும் வரம்பற்ற உள்ளூர், STD மற்றும் ரோமிங் கால்களை வழங்குகிறது. டிவி பிரீமியம், வின்க் மியூசிக் மற்றும் நார்டன் மொபைல் செக்யூரிட்டி போன்ற சேவைகளும் இந்த ஏர்டெல் சேவையில் பெறமுடியும்.


 இந்த இருதிட்டங்களில் அளிக்கப்படும் டேட்டாக்கள், வேலிடிட்டி நாட்களின் முழு நேரத்திற்கும் பொருந்தும். இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் தங்கள் ப்ரீபெய்ட் மொபைல் இணைப்பை ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கு மிகச்சிறந்தது.

அதுமட்டும் இன்றி இதற்க்கு போட்டியாக வோடபோன் புதிய ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது.


 அதில், 180 நாட்கள் வேலிடிட்டியில் 3G/4G அலைவரிசையில் 6GB டேடாவுடன் வோடபோன் ரூ.599 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் வரம்பற்ற உள்ளூர், STD மற்றும் ரோமிங் கால் அழைப்புகளை பெறுவார்கள்.


மேலும் 1800 இலவச SMS-ஐ வழங்குகிறது. இந்த ரூ.599 திட்டத்தில் டிவி, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான லைவ் ஸ்டிரிமிங், வோடபோனின் பிலெ வேல்யூ ஆட் ஸர்வீசின் ( Play value-add service) சந்தாவும் அடங்கும்.

No comments:

Post a Comment