இனி நடந்து வர வேண்டாம்; வேனில் பயணிக்கலாம்!' - மாணவர்களை ஆச்சர்யப்பட வைத்த அரசுப் பள்ளி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 15, 2019

இனி நடந்து வர வேண்டாம்; வேனில் பயணிக்கலாம்!' - மாணவர்களை ஆச்சர்யப்பட வைத்த அரசுப் பள்ளி

அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் சென்று வரும் வகையில், கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து வேன் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்து மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.


 இந்த வேனில், எந்த வித கட்டணமுமின்றி மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி முடிந்ததும், வீட்டுக்குக் கொண்டுபோய் விடுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆவணத்தாங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து 109 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.


 ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வகுப்பு எனப் பள்ளி சிறந்து விளங்குகிறது.

கரேத்தே, சிலம்பம் உள்ளிட்டவற்றுக்குச் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.


இந்த நிலையில்தான், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் சுமார் 2 முதல் 3 கி.மீ வரையிலும் நடந்தே வர வேண்டும். இதனால், மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.


இந்த நிலையில், தான் பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் முயற்சியால், நம் பள்ளி - நம் திட்டம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் கிராம மக்கள், தன்னார்வலர்களை இணைத்து அவர்களிடம் நிதி பெற்று, பள்ளிக்குப் புதிய வேனை வாங்கியுள்ளனர்.

 4 ஷிப்டாகப் பள்ளியிலிருந்து வேன் இயக்கப்படுகிறது. இந்த வேனில், அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகமாகச் சவாரி செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment