மிரட்டும் அமெரிக்கா - என்ன செய்யும் இந்தியா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 10, 2019

மிரட்டும் அமெரிக்கா - என்ன செய்யும் இந்தியா?

ரஷ்யாவுடன் கையெழுத்தாகியுள்ள $5.43 பில்லியன் மதிப்பிலான எஸ்-400 ராணுவ ஒப்பந்தத்தை ரத்துசெய்தால்தான், 5ம் தலைமுறையைச் சேர்ந்த எஃப்-35 ஃபைட்டர் ஜெட்களை இந்தியாவிற்கு வழங்குவோம் என அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது.

ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்தம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தொடக்கத்திலிருந்தே எரிச்சலை உண்டாக்கி வருகிறது.

எனவே, இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே உயர்தொழில்நுட்ப பரிமாற்றங்களை கடுமையாக பாதிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதே ஒப்பந்தத்தை துருக்கியும், ரஷ்யாவுடன் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, அமெரிக்கா சார்பில், துருக்கி அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டுமென நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், துருக்கி மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, துருக்கி விஷயத்தில் அமெரிக்காவின் இறுதிகட்ட செயல்பாடுகளைப் பார்த்த பின்னரே, இதுதொடர்பாக முடிவெடுக்கலாம் என இந்தியா தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment