இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கான காரணம் என்ன? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 4, 2019

இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கான காரணம் என்ன? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

இருசக்கர வாகனத்தில்  செல்வோர் வெயில் அதிகம் இருப்பதால் ஹெல்மெட் அணிவதில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியது. ஹெல்மெட் அணிவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் அளித்துள்ளது.


 கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த  எடுத்த நடவடிக்கை என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாளை மறுநாள் போக்குவரத்து காவல் இணை மற்றும் துணை ஆணையர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பைக் பந்தயத்தில் ஈடுபட்ட இருவர் ஹெல்மெட் அணியாததால் இறந்துள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 நாளைமறுநாள் நேரில் ஆஜராக விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பைக் பந்தயத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment