இந்த வேலைக்கு கல்வித்தகுதி தேவையில்லையாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 15, 2019

இந்த வேலைக்கு கல்வித்தகுதி தேவையில்லையாம்

பேருந்துகள், மற்றும் கனரக சரக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு எந்த வித குறைந்தபட்ச கல்வித்தகுதியும் தேவையில்லை என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தது எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த முடிவை மத்திய அரசு மாற்றிக் கொள்ள திட்டமிட்டு, கல்வித் தகுதியை நீக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது கடும் சர்ச்சையை கிளப்பக்கூடும் என்றாலும் விபத்துகளுக்கும் படிப்பின்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விபத்துகளை ஏற்படுத்துவோர் கல்வியறிவு அற்றவர்கள் என்பதற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment