ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஆளில்லா விமானம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 15, 2019

ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஆளில்லா விமானம்

இந்தியா முதல் முறையாக ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக இயக்கி பாதுகாப்புத்துறை சோதனை செய்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற இந்த சோதனையில் முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் இயக்கப்பட்டது.

20 நிமிடங்கள் மட்டுமே பறக்க விடப்பட்ட அந்த விமானம் மணிக்கு 6174 கிலோ மீட்டர் வேகத்தில், ஹைப்பர் சோனிக் என்ற ஒலியை மிஞ்சும் வேகத்தில் பறந்தது.

இதன் மூலம் ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் விமானத்தை இயக்கும் இந்திய தொழில் நுட்பம் முழு வெற்றியை எட்டி உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஏவுகணைகளை உருவாக்கவும், பயணிகள் போக்குவரத்தை வேகப்படுத்தவும் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்புத்துறை கூறியுள்ளது

No comments:

Post a Comment