சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து தேர்வு எழுதிய பெண் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 2, 2019

சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து தேர்வு எழுதிய பெண்

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் பெண் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து ஐஏஎஸ் தேர்வு எழுதினார்.


கோட்டயத்தின் எருமேலி பகுதியை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் லதிஷா அன்சாரி (24). இவர் மிகவும் அபூர்வமான எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும், நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், சுவாசிக்க முடியாமல் திணறி வருகிறார்.


இதனால்,  பெரும்பாலும் ஆக்சிஜன் சிலிண்டருடன் தான் வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இவர், எம்காம் படித்துள்ளார்.

தனது உடலில் இவ்வளவு நோய்கள் இருந்த போதிலும், படிப்பில் மட்டும் மனம் தளராமல் இருந்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு லதிஷா தயாராகி வந்தார்.


 இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை எழுத வந்த இவருக்கு, சிறிய ரக ஆக்சிஜன் சிலிண்டரை கலெக்டர் இலவசமாக வழங்கினார்.


 இதன் உதவியுடன் சுவாசித்த லதிஷா, ஐஏஎஸ் தேர்வை எழுதினார். அவருடைய மன உறுதியை கலெக்டர் உள்ளிட்டோர் பாராட்டினர்

No comments:

Post a Comment