சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 1, 2019

சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 2018ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் விருது பெற வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஜெயந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகிறது.

 அதன்படி, 2018ம் ஆண்டு தமிழகத்தில் சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் விருது பெறுவதற்கான கால அளவு 15-4-2019 தேதியில் இருந்து 30.6.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

 சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை, தரைதளம், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment