கூடுதலாக வழங்கிய பணத்தை வசூலிக்க பென்ஷனில் பிடித்தம் செய்யும் அரசின் உத்தரவு அதிரடி ரத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

கூடுதலாக வழங்கிய பணத்தை வசூலிக்க பென்ஷனில் பிடித்தம் செய்யும் அரசின் உத்தரவு அதிரடி ரத்து

அரசு ஊழியர், பென்ஷனர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட பணத்தை வசூலிக்க ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை ஏற்படுத்த அரசுக்குஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


 மதுரை மாவட்டம், பேரையூர் கெஞ்சம்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி, கடந்த 30.9.1996ல் ஓய்வு பெற்றேன்.


எனக்கு சம்பளம் மற்றும் பென்ஷன் நிர்ணயம் செய்த போது, கூடுதலாக நிர்ணயம் செய்து விட்டதாகவும், அந்த பணத்தை எனது பென்ஷனில் பிடித்தம் செய்ய வேண்டுமென கருவூலத்துறை அலுவலர் கடந்த 15.10.2015ல் உத்தரவிட்டார்.


 இதன்படி, ரூ.6,152 பிடித்தம் செய்யப்பட்டது

நான் முதுமையில் உள்ளேன். எனக்கு வேறு வருமானம் இல்லை. எனவே, எனது பென்ஷனில் பிடித்தம் செய்யும் உத்தரவை ரத்து செய்து, பணத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.


 ''மனுதாரருக்கு 81 வயதாகிறது. இந்த நேரத்தில் அவரது பென்ஷனில் பிடித்தம் செய்வது என்பது அவரது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். மக்கள் செலுத்தும் வரிப்பணம், கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதைக் கொண்டே சம்பளம், பென்ஷன் வழங்கப்படுகிறது.


 அதே நேரம் குரூப் 3 மற்றும் குரூப் 4 நிலையிலுள்ள பணியாளர்களுக்கு கூடுதலாக கணக்கிட்டு சம்பளமோ, பென்ஷனோ வழங்கப்பட்டிருந்தால், அதை அவர்களிடம் பிடித்தம் ெசய்யத் தேவையில்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அரசு அலுவலகத்திலுள்ள ஒரு ஆவணம் திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ அதற்கு சம்பந்தப்பட்ட ஊழியரே பொறுப்பு. இதைப்போல சம்பளமோ, பென்ஷனோ கூடுதலாக கணக்கிடப்பட்டிருந்தால், இதற்கு கணக்கிட்டவரே பொறுப்பு.

எனவே, மனுதாரரின் பென்ஷனில் பிடித்தம் செய்யும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் சம்பளம், பென்ஷன் நிர்ணயம் செய்ததில் தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்,


 இதனால் ஏற்பட்ட இழப்பை சம்பந்தபட்டவர்களிடம் இருந்து வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் பென்ஷனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட அந்த பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை தலைமை செயலர் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.


 சம்பளமோ, பென்ஷனோ கூடுதலாக கணக்கிடப்பட்டிருந்தால், இதற்கு கணக்கிட்டவரே பொறுப்பு.

No comments:

Post a Comment