சத்துணவுப் பணியாளர்களுக்கு நகவெட்டி, சோப்பு, கையுறை: உணவு தரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 9, 2019

சத்துணவுப் பணியாளர்களுக்கு நகவெட்டி, சோப்பு, கையுறை: உணவு தரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை

சத்துணவுப் பணியாளர்களுக்கு நகவெட்டி, சோப்பு, கையுறைகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய சுகாதாரப் பேழைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 43,000-க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.


 இவற்றில் பள்ளி மாணவர்களுக்கு தக்காளி, எலுமிச்சை, சாம்பார் சாதம் உள்ளிட்டவை மதிய நேரங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இப் பணிகளில் சத்துணவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


ரூ.1.73 கோடி செலவில்...:


 சத்துணவு மையப் பணியாளர்கள் சுகாதாரத்தை கடைப்பிடிக்க சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.1.73 கோடி செலவில் சுகாதாரப் பேழைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது


. இதன் அடிப்படையில், சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு மையம் ஒன்றுக்கு ரூ.400 செலவில் சோப்பு, நகவெட்டி, துண்டு, கையுறைகள் உள்ளிட்டவை அடங்கிய சுகாதாரப் பேழைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணியாளர்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு சுகாதார பேழைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


சத்துணவு சமைக்கும்போதும், பரிமாறும்போதும் கையுறைகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். சுகாதாரம் பேணி காக்கப்படுவதன் மூலம் உணவின் தரம் பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment