கூகுள் , ஆப்பிள் 'நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய நிறுவனம் ! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 14, 2019

கூகுள் , ஆப்பிள் 'நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய நிறுவனம் !

கடந்த 12 ஆண்டுகளாக ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் இரு நிறுவனங்களும் மாறி மாறி முதலிடம் பிடித்தன.


 இந்த நிலையில் கடந்த ஆண்டுக்கான உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பிராண்டாக அமேசான் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆப்பிள் 2வது இடத்தையும், கூகுள் நிறுவனம் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.


 மேலும் அமேசான் நிறுவனத்தின்இந்த ஆண்டின் மொத்த மதிப்பானது 315.5 பில்லியன் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 108 பில்லியன் அதிகரித்துள்ளது.


இதனால் அந்த நிறுவனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தில் மொத்த மதிப்பு 309. 5 பில்லியன் ஆகும்.

அதன் போட்டி நிறுவனமான கூகுளின் மொத்த மதிப்பு 309 பில்லியன் ஆகும். இதனால் அடித்த ஆண்டு முதலிடம் பிடிக்க இருநிறுவனங்களும் மிகவும் போட்டிபோட்டு வருகின்றன.

No comments:

Post a Comment