ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் செய்த செயல்: பொது மக்கள் வரவேற்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் செய்த செயல்: பொது மக்கள் வரவேற்பு

சோழிங்கநல்லூர் அருகே ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு பிஸ்கெட் கொடுத்து போலீசார் பாராட்டினர். இதனை பொது மக்கள் வரவேற்றனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த முடியாதா? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சோழிங்கநல்லூரை அடுத்த அக்கறை சிக்னல் அருகே நீலாங்கரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மேத்தா தலைமைக் காவலர் சிங்காரவேல் உள்ளிட்ட போலீசார் பந்தல் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்

அவர்கள் அவ்வழியே செல்லும வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொது மக்களிடம் அரை மணி நேரம் ஹெல்மெட் அணிவது மற்றும் வாகனத்தை பொறுமையாக ஓட்டிச் செல்வதைப் பற்றி எடுத்து கூறினர். மேலும் சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நிறுத்தி கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு மற்றும் பிஸ்கெட் போன்றவைகளை கொடுத்து மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைத்தனர். இதனை பொது மக்கள் வரவேற்றனர்.

No comments:

Post a Comment